Home - ஸ்வப்பனமல்ல தரிஸனம்

 Namaskaram. 

This blog is to document my mother Smt.Chandra Nagarajan's deiviga swappanams, and her understanding of how the swappanams guided her spiritually.

Now in her own words...

___________

எனக்கு சிறு பிராயத்திலேயே அடிக்கடி சொப்பனத்தில் நான் மட்டும் அம்பாளை ஏகாங்கியாக தரிசனம் செய்வது போல் இருக்கும். அம்பாள் அகிலாண்டேஸ்வரி.
அம்பாளின் பாதத்தில் மஞ்சள் அல்லது
குங்குமமாக பெருகிக் கொண்டே இருக்கும். நான்  பார்த்துக் கொண்டே இருக்கும் போதே அம்பாள்
சர்வாலங்கார பூஷிதயாய் மானுட சரீரத்துடன் ரோஸ்கலர்‌ பட்டுப்புடவை அணிந்து மிக அழகாக சிவப்பாக
இருப்பாள். அப்படியே என்னை நோக்கி நடந்து பேச வருவாள். எனக்கு மூச்சு முட்டும், திணறும். பேச்சுவராது. நாக்கு வறண்டு ஒட்டிக் கொள்ளும். 
ஒருபயம், ஒரு ஆனந்தம் கலந்த நிலை. வேர்த்து, வேர்த்து கொட்டும். அப்படியே முழித்துக் கொண்டு விடுவேன்.
இதுபோல் பலதடவைகள் அம்பாள் பேச நெருங்கியும் தவறவிட்டதை இப்போது நினைத்து வருந்தாத  நொடியில்லை.

இந்த பயத்திற்கான காரணம், அம்பாள் எதைக் கேட்பாளோ?  எதைச் சொல்வாளோ? மரியாதை நிமித்தம்
தலையாட்டி விட்டு, செய்யமுடியாமல்
போய்விட்டால் என்ன செய்வது? என்ற அஞ்ஞானமே.

"சொல்லுபவளுக்கும் கேட்பவளுக்கும், 
நடத்துவதற்கு ஒரு கருவியாய் நம்மை உபயோகிக்க நினைக்கிறாள்" என்ற
பக்குவம் இல்லாததே காரணம்.

காளமேகப்புலவர் திருவானைக்காவல்
மடப்பள்ளியில் பணிபுரிந்து ஒய்வெடுத்த வேளையில் கடாக்ஷிக்க வந்தமாதிரி சிந்திக்க தெரியாதது, 
மனப்பக்குவ குறைவே காரணம்.

_______

🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🙏🏾



___________

Comments

Popular posts from this blog

1 - ஸ்வப்பனமல்ல தரிசனம்

2 - ஸ்வப்பனமல்ல தரிஸனம்