Posts

1 - ஸ்வப்பனமல்ல தரிசனம்

Image
என்னுடைய மிகச்சிறிய பிராயம். பாவாடை, சட்டை அணிந்து 3 அல்லது 4 வயதுதான் இருக்கும் எனக்கு அப்போது. தந்தை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு தோளில் தூக்கிச் செல்வார். அப்படி அடிக்கடி தாய், தந்தையுடன் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு செல்வது வழக்கம். அந்த காலகட்டத்தில் ஸ்வப்பனத்தில், 'அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியின் துவாரபாலகிகளில் அன்னையின் வலப்புறம் இருக்கும் நாயகி, பெரிய ஆஜானுபாகுவான தோற்றம் உடையவள், முன் மண்டபத்தில் இருப்பவள், பிரதஷிணம் வரும் சமயம், என் பாவாடையை பிடித்து இழுக்கிறாள்'. இந்த ஸ்வப்பனத்திற்கு பிறகு பல நாட்கள் ஆகியும் , அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு செல்லும் போதெல்லாம், என் கூட வரும் தாய், தந்தையை இறுகப்பிடித்துக்‌ கொண்டு, பாவாடையைப் பிறர் பிடித்து இழுக்க முடியாதபடி சுருட்டிக் கொண்டு செல்வேன். ஆனால் பெற்றோரிடம் கூட அந்த ஸ்வப்பனத்தை பற்றி எதுவும் கூறியதில்லை. அதன்பின் பல வருடம் கழித்து, 10 வயதில் அம்பாள் சன்னதி அருகேயே குடியிருக்கும் பாக்கியம் கிட்டியது. எனக்கும் பயம் தெளிந்து சிநேகிதிகளுடன் நித்தம் கோயில் செல்வேன். இப்போதெல்லாம் அகிலாண்டேஸ்வரி சன்னதி செல்லும் போது அந்...

2 - ஸ்வப்பனமல்ல தரிஸனம்

Image
கனவில் பங்குனி உத்திர நாளில் சேர்த்தி தரிசனம். __________ திருமண வயது வந்தபோது, அம்மா ஜாதகத்தை (இராமயணம் படித்துப் படித்தே ஜாதகம் பார்க்க கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.) காட்டியபோது, ஸ்ரீ ரங்கம் கோவிலில் சுக்கிர ப்ரிதிக்காக வெள்ளிக் கிழமைகளில் தாயாருக்கும், பங்குனிஉத்திர-சேர்த்தி மண்டபத்திற்கும் சேர்த்து, தாயார் சந்நிதியில் பூ-விற்கும் இடத்தின் ஆஞ்சநேயரையும் சேர்த்து, 12 பிரதக்ஷிணம் செய்து, சேர்த்தி மண்டபத்தில் நெய்விளக்கேற்றச் சொல்லியதை செய்தேன்.  தாயாருக்கு 3 விரளிமஞ்சள் முதல்நாளே (வியாழன் இரவு) ஊறவைத்து அம்மியில் அரைத்துக் கொள்வேன். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, திருவானைக்காவலிருந்து நடந்தே (மடிகுறையாமல் இருக்க) ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி செல்வேன். எப்போதுமே பெண் என்பதால், சேர்ந்தார்ப்போல் மூன்று வாரம் மட்டுமே செல்ல முடியும். நான்காவது வாரம் எனக்கு பதில் அப்பா செல்வார். முதன்முதலாய் விரதம் செய்யும் போது நான்காவது வாரம் வெள்ளிக்கிழமை, அன்று தான் " ஸ்நானம்" செய்திருந்ததால், அப்பா எனக்கு பதில் சென்று வந்தார். அன்று " எதேச்சையாக பங்குனி உத்...

Home - ஸ்வப்பனமல்ல தரிஸனம்

Image
 Namaskaram.  This blog is to document my mother Smt.Chandra Nagarajan's deiviga swappanams, and her understanding of how the swappanams guided her spiritually. Now in her own words... ___________ எனக்கு சிறு பிராயத்திலேயே அடிக்கடி சொப்பனத்தில் நான் மட்டும் அம்பாளை ஏகாங்கியாக தரிசனம் செய்வது போல் இருக்கும். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. அம்பாளின் பாதத்தில் மஞ்சள் அல்லது குங்குமமாக பெருகிக் கொண்டே இருக்கும். நான்  பார்த்துக் கொண்டே இருக்கும் போதே அம்பாள் சர்வாலங்கார பூஷிதயாய் மானுட சரீரத்துடன் ரோஸ்கலர்‌ பட்டுப்புடவை அணிந்து மிக அழகாக சிவப்பாக இருப்பாள். அப்படியே என்னை நோக்கி நடந்து பேச வருவாள். எனக்கு மூச்சு முட்டும், திணறும். பேச்சுவராது. நாக்கு வறண்டு ஒட்டிக் கொள்ளும்.  ஒருபயம், ஒரு ஆனந்தம் கலந்த நிலை. வேர்த்து, வேர்த்து கொட்டும். அப்படியே முழித்துக் கொண்டு விடுவேன். இதுபோல் பலதடவைகள் அம்பாள் பேச நெருங்கியும் தவறவிட்டதை இப்போது நினைத்து வருந்தாத  நொடியில்லை. இந்த பயத்திற்கான காரணம், அம்பாள் எதைக் கேட்பாளோ?  எதைச் சொல்வாளோ? மரியாதை நிமித்தம் தலையாட்டி விட்டு, செய...