2 - ஸ்வப்பனமல்ல தரிஸனம்
கனவில் பங்குனி உத்திர நாளில் சேர்த்தி தரிசனம்.
__________
திருமண வயது வந்தபோது, அம்மா ஜாதகத்தை (இராமயணம் படித்துப் படித்தே ஜாதகம் பார்க்க கற்றுக்கொண்டதாக கூறியுள்ளார்.)
காட்டியபோது, ஸ்ரீ ரங்கம் கோவிலில்
சுக்கிர ப்ரிதிக்காக வெள்ளிக் கிழமைகளில் தாயாருக்கும், பங்குனிஉத்திர-சேர்த்தி மண்டபத்திற்கும் சேர்த்து, தாயார் சந்நிதியில் பூ-விற்கும்
இடத்தின் ஆஞ்சநேயரையும் சேர்த்து, 12 பிரதக்ஷிணம் செய்து, சேர்த்தி மண்டபத்தில் நெய்விளக்கேற்றச்
சொல்லியதை செய்தேன்.
தாயாருக்கு 3 விரளிமஞ்சள் முதல்நாளே (வியாழன் இரவு) ஊறவைத்து அம்மியில் அரைத்துக் கொள்வேன். வெள்ளிக்கிழமை அதிகாலையில் எழுந்து எண்ணெய்
தேய்த்து குளித்து, திருவானைக்காவலிருந்து நடந்தே (மடிகுறையாமல் இருக்க) ஸ்ரீரங்கத்தில் தாயார் சன்னதி செல்வேன்.
எப்போதுமே பெண் என்பதால், சேர்ந்தார்ப்போல் மூன்று வாரம் மட்டுமே செல்ல முடியும்.
நான்காவது வாரம் எனக்கு பதில்
அப்பா செல்வார். முதன்முதலாய்
விரதம் செய்யும் போது நான்காவது வாரம் வெள்ளிக்கிழமை, அன்று தான் " ஸ்நானம்" செய்திருந்ததால், அப்பா எனக்கு பதில் சென்று வந்தார்.
அன்று " எதேச்சையாக பங்குனி உத்திரம். வருடத்தில் பங்குனி உத்திரம் ஒருநாள் மட்டுமே தாயாரும் ரங்கநாதரும் சேர்ந்து இருக்கும் திருநாள். நேரில் சென்று காணதது மனதை மிக்க வாட்டியது.
அன்று மதியம் சுமார் 11.30 AM. ஒரு பெண்ணிற்க்கு Math tuition சொல்லிக் கொடுத்து கொண்டு இருந்தேன். ஒரு sumஐ போடச் சொல்லிவிட்டு
சிறிது கண்மூடி அப்படியே அயர்ந்து
விட்டேன், என்னையறியாமல்.
அப்போது ஸ்வப்பனத்தில் ஸ்ரீரங்கம் சேர்த்தி பெருமாள் மண்டபம்.
ஊஞ்சலில் ஒருவர் அருகே ஒருவராக
தாயாரும் பெருமாளும் ஒருவரை ஒருவர் நோக்கி சர்வாலங்காரத்துடன்.
ரம்மியமான காட்சியில் ஏகாந்த தரிசனம். தாயார் அருகில் oval shape வெள்ளித்தட்டில் ஸ்ரீ கஜலெஷ்மி.
ஆனந்தமாக பார்த்துக்கொண்டே
இருக்கும் போதே tuition படித்துக்கொண்டிருந்த பெண் சந்தேகம் கேட்க எழுப்பி விட்டாள்.
அப்பெண் ஆனந்த தரிசனத்தைக் கலைத்து விட்டாளே என்றுகூட
வருத்தம் ஏற்பட்டது.
நிஜம்
______
சொப்பனத்தில் நான் கண்ட வெள்ளித்தட்டை அதற்கு முன் தாயார்
சன்னதியில் நான் உன்னிப்பாக கவனித்தது இல்லை. ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை சென்றபோது தாயார் சன்னதியில் வெள்ளி Oval plate கஜலெஷ்மி இருக்கக் கண்டு மிக்க ஆனந்தம் அடைந்தேன்.
_______
பங்குனி உத்திரம் சேர்த்தி மண்டபத்தில், பெருமாளும் தாயாரும்
🙏🏾🌹🌹🌹🌹🌹🌹🙏🏾
Comments
Post a Comment